இறையருள் இல்லாமல் பஞ்ச பட்சி சாஸ்திரம் மட்டுமல்ல. வேறு எந்த சாஸ்திரமும்
நமக்கு கைவராது. ஆகையால் இறைவனை வணங்கித் தொழுது விட்டு இதை
ஆரம்பிக்கிறேன்.
பட்சி தெரிந்தவனிடம் பகை கொள்ளாதே என்பது முதுமொழி. இந்த சாஸ்திரம் தெரிந்தவரை பகைத்துக் கொண்டால் தன் மீது பகை கொண்டவரை வீழ்த்தும் வல்லமை அவர்களுக்கு இருக்கும். அவ்வளவு சக்தி வாய்ந்தது. இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள்.
பட்சிகள் மொத்தம் ஐந்து. அவை முறையே வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகியன. முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி
இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை
அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்
அரசு - 100% பலம்
ஊண் - 80% “
நடை - 50% “
துயில் - 25% “
சாவு - 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி அடுத்தப் பாடத்தில் விரிவாகத் தருகிறேன்.

வல்லூறு
அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை
திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்
காகம்
உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்
கோழி
அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்
மயில்
இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை
அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்
அரசு - 100% பலம்
ஊண் - 80% “
நடை - 50% “
துயில் - 25% “
சாவு - 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதைப் பற்றி அடுத்தப் பாடத்தில் விரிவாகத் தருகிறேன்.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும்
நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும்.
இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம்,
பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல்
இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
வளர்பிறை - படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
காகம் - திங்கள்
கோழி - செவ்வாய்
மயில் - புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு -செவ்வாய்
ஆந்தை -திங்கள்
காகம் -ஞாயிறு
கோழி -வியாழன், சனி
மயில் -புதன், வெள்ளி
வளர்பிறை - படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
காகம் - திங்கள்
கோழி - செவ்வாய்
மயில் - புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு -செவ்வாய்
ஆந்தை -திங்கள்
காகம் -ஞாயிறு
கோழி -வியாழன், சனி
மயில் -புதன், வெள்ளி
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-
வளர்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன், திங்கள்
காகம் - வியாழன்
கோழி - வெள்ளி
மயில் - சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - வெள்ளி
ஆந்தை -ஞாயிறு
காகம் -ஞாயிறு, செவ்வாய்
கோழி - திங்கள், புதன்
மயில் -வியாழன்
தேய்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -வெள்ளி
ஆந்தை - வியாழன்
காகம் -புதன்
கோழி - ஞாயிறு, செவ்வாய்
மயில் - திங், சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன்
காகம் - வியாழன்
கோழி - திங்கள், சனி
மயில் -வெள்ளி
இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் (எதற்கு எந்த நேரம் என்று அடுத்தப் பாடத்தில் குறிப்பிடுவதாக முன்பே சொல்லியிருக்கிறேன்) அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.
அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.
இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.
தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
இதைப் படிப்பவர்கள் யாரும் தீய காரியத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் அரைகுறையாகப் புரிந்துக் கொண்டு சோதனை செய்து தனக்குத் தானே பிரச்சினையைத் தேடிக்கொள்ளாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:
Post a Comment