Tuesday, 3 December 2013

இயற்கையான ஆரோக்கியத்திற்கு "சனி நீராடலை" மீண்டும் வழக்கப்படுத்துவோம்

தீபாவளி முடிந்து சில நாட்களே ஆகின்றன. நாம் அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளித்திருப்போம். ஒருவருக்கொருவர் “கங்கா ஸ்நானம் ஆயிற்றா?” என்றும் கேட்டு மகிழ்ந்திருப்போம்.  தீபாவளி அன்று எண்ணெயில் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியும், வெந்நீரில் கங்காதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம் .எனவே தான் தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை கங்கா ஸ்நானம் என்கிறோம். தீபாவளி குளியலை கங்கா ஸ்நானம் என்பதாலோ என்னவோ நம்மில் பலர், தீபாவளி அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், அடிக்கடி எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பது மிகவும் நல்லது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அதுவும் இளையத் தலைமுறையினர், தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கே கூட சலித்துக்கொள்வதைக் காண முடிகிறது. ஆனால், நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சொல்லி வைத்துச் சென்ற பல விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவையே.

வாரத்தில் ஒருமுறையேனும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதற்காகவே நம் முன்னோர்கள் “சனி நீராடு” என்று சொல்லி சொல்லி வைத்தனர்.

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் என்னன்ன நன்மைகள்
-உடல் சூட்டைத் தணிக்கிறது.
-உடல் புத்துணர்ச்சி பெறும்
-உடலில் உள்ள நரம்புகள் செயல்பாடு அதிகரிக்கும்.
-திருமணம் ஆன தம்பதிகளுக்கு இல்லற இன்பம் அதிகரிக்கும்.
-சளி, தலைவளி தொல்லையிலிருந்து விடுபடலாம்.
-தூக்கமின்மை விலகும்.

எப்படி குளிப்பது?
எண்ணெய்க் குளியலுக்கு ஏற்ற எண்ணெய் நல்லெண்ணையாகும். நல்லெண்ணையைச் சூடுபடுத்தி முதலில் உச்சந்தலையில் சூடு பறக்க தேய்க்க வேண்டும்.  பின் உடலின் ஒவ்வொரு பாகங்களிலும் மெதுவாக தேய்க்க வேண்டும். பின் சூரிய ஒளியில் 20 நிமிடம் உடல் காய நிற்க வேண்டும். பின்னர் வெந்நீரில் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இவ்வாறு எண்ணெய் குளியலின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். முக்கியமான நமது உடலில் வர்மப் புள்ளிகளில் அடிப்பட்டால் அதனைப் போக்கும் தன்மை எண்ணெய்க் குளியலுக்கு உண்டு என்பதையும் வர்மானிகள் சொல்லி வைத்துச் சென்றுள்ளனர்.
மிகவும் அரிதான வர்மக் கலையின் மிகச் சிறிய பகுதி மக்களிடையே பரப்பி விடப்பட்டுள்ளது என்றால் அது “சனி நீராடுதல்” எனும் எண்ணெய் குளியலாகத் தான் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment