Tuesday, 3 December 2013

உடல் எடை குறைய... ( இயற்கை முறை )

   உடல் எடை குறைக்க நாம் எவ்வளவோ முயற்ச்சித்து இருப்போம். இயற்ககை நமக்கு அளிக்கும் உணவு முறையிலும் கொஞ்சம் நாம் கவனம் சொலுத்துவோமா!


1. தினமும் ஐந்து கப் காய்கறி அல்லது பழம் சாப்பிட வேண்டும். கீரை வகைகள், பீன்ஸ், அவரை போன்ற காய்கறிகளையும், புடலங்காய், பூசணி போன்ற கொடிவகைக் காய்கறிகளையும் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

2. சீசனல் ப்ரூட்ஸ் எல்லாம் சாப்பிடலாம். ஆனால், மாம்பழம், பலாப்பழம், கிழங்கு வகைகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

3. உடல் எடை குறைய விரும்புபவர்கள் இரவில் பால் அருந்திவிட்டு உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், உணவில் தேங்காய் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

4. பப்பாளிக் காயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். பப்பாளிக் காயை கூட்டு, சாம்பார் செய்து சாப்பிடலாம்.

5. முள்ளங்கியையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

6. இஞ்சியை இடித்து சாறு எடுத்து அடுப்பில் ஏற்றி, சாறு சற்று சுண்டியதும் அதில் தேன் விட்டு சிறிது நேரம் அடுப்பில் வைத்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.

7. காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்.

8. வாழைத் தண்டு சாறு, பூசணி சாறு, அருகம்புல் சாறு இம்மூன்றில், ஏதாவது ஒன்றை குடித்து வர உடல் எடை குறையும். உடல் அழகு பெறும்.

9. என்னடா இது இப்படி தொப்பையோட, குண்டா இருக்கோமே அப்படின்னு கவலைப்படுறத விட்டுட்டு, பிசியோதெரபிஸ்ட்டுகள், பிட்னெஸ் மாஸ்டர் என தகுந்த நபர்களிடம் உரிய ஆலோசனை பெற்று, வாழ்க்கையை என்ஜாய் செய்யுங்கள்.

10. வாழ்க்கை வாழ்வதற்கே!

No comments:

Post a Comment