Wednesday, 4 December 2013

அசல் தேன் எது? கண்டறிய சில எளிய வழிகள்

     இந்தக்காலத்தில் எதில் எடுத்தாலும் கலப்படம்தான்! உடுத்தும் உடை யிலும், கட்டுமானப் பொருட்களிலும் கலப்படம் செய்கிறார்கள் என்றா ல், சிலர், பணத்தின் மீது வெறிகொண்டு, மற்ற‍வர்களது உயிரை துச்ச‍ மாக எண்ணி, சாப்பிடும் பொருட்களில் கூட கலப்படம் செய்கிறார்கள். அப்ப‍டி கலப்படம் செய்யும் உணவுப் பொருட்களில் ஒன்றுதான் இந்த தேன்.

அசல் தேன் எத்தனய ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப்போகாமல் நல்ல‍ நிலையில் அப்ப‍டியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்க‍ரைப் பாகு மற்றும் வெல்ல‍ப் பாகுவை, அசல் தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி வாங்கி விடுகி றோம்.

அசல் தேன் எது? கலப்பட தேன் எது? என் பதை எளிமையான முறையில் கண்டறி லாம். அது எப்ப‍டி என்றுதானே கேட்கி றீர்கள். அந்த மூன்று வழிகளில் கண்டறி யலாம்.

1) ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை,
தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும் மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறிய லாம்
ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறிய லாம்.

2) ஒரு டம்ளர் நிறைய‌ தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன், தண்ணீரோடு கரையாம ல் நேராக கீழே சென்று விழுந்தால், அது அசல் தேன் என்பதை அறிய லாம்.
ஒருவேளை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்துவிட்டால், அது கலப்படத் தேன் என்பதை அறியலாம்.

3) ஒரு தீக்குச்சியின் மருந்து பகுதியில் ஒரு துளி தேனை விட்டு, அந்த தீக்குச்சியை, தீப்பெட்டியின் பக்க‍ வாட்டில் உள்ள‍ மருந்து பட்டையில் உரசுங்கள், உடனே தீப்ப‍ற்றி எறிந்தால், அது அசல்தேன் என்பதை அறியலாம்.
ஒருவேளை அந்த தீக்குச்சி எறியாமல் போனால் அது கலப்படம் தேன் என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment