Wednesday, 4 December 2013

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா?



சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.
 
சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.
 
எது உண்மை? எது பொய்?இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!
 
1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் பழங்கள் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்:
1.ஆப்பிள்
2.ஆரஞ்சு
3.சாத்துக்குடி
4.மாதுளை
5.கொய்யா
6.பப்பாளி

சாப்பிடக்கூடாத பழங்கள்:
1.மாம்பழம்
2.வாழை
3.பலாப்பழம்
4.சப்போட்டா
5.திராட்சை
6.சீதாப்பழம்
7.தர்பூசணி
8.அன்னாசி


2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.

4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.

5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

சக்கரை நோயாளிகள் பழம் உண்ணலாம் என்று அறிந்தோம்.

வாழைபழம் மலச்சிக்கலுக்கு நல்லது என்று உண்பார்கள். அது சக்கரை நோயாளிகளுக்கு உகந்தது அல்ல, ஏனெனில் அதில் மாவுச்சத்து அதிகம்.
பப்பாளி: பப்பாளியில் விட்டமின் ’ஏ’ அதிகம். ஆகையால் சக்கரை நோயாளிகளுக்கு உகந்த பழமாக உள்ளது. மேலும் இது செல் சிதைவையும் தடுக்கிறது. இதுவும் கொய்யாவும் மலச்சிக்கலுக்கு உகந்தவை.

ஆரஞ்சு,சாத்துக்குடி,நெல்லி: விட்டமின் ‘சி’ இவற்றில் இருப்பதால் புண்கள் எளிதில் ஆறும், அதனால் சக்கரை நோயாளிகள் உண்பது நல்லது.

ஜூஸ்:
சிலர் பழம் உண்ணலாம் என்றவுடன் பழ ஜூஸ் குடிக்கலாம் என்று எண்ணுகிறார்கள். இது தவறு.

1.ஜூஸில் பழத்தில் உள்ள நார்ச்சத்து இல்லை.

2.மேலும் சக்கரையை விரைவில் உயர்த்தும்.

3.விட்டமின்களும் வீணாகின்றன.

சக்கரை சேர்க்காத பழரசங்கள்:
இவற்றில் சக்கரை போடாவிட்டாலும் சுவைக்காக செயர்க்கை இனிப்புக்கள் மற்றும் குளுக்கோஸ் சேர்க்கிறார்கள்
கர்ப்பிணிப்பெண்கள் ஜூஸ் அருந்தினால் சக்கரை கூடும். ஆகையினால் அதிகம் ஜூஸ் அருந்தக்கூடாது.

மேலும் பழங்களில் பொட்டாசியம் சத்து அதிகம். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக்குறைத்து பழங்கள் சேர்த்துக்கொண்டால் இரத்த அழுத்தம் குறையும்.

காலை உணவு: ஒரு இட்லியைக் குறைத்து ஒரு ஆப்பிள் சேர்க்கவும்.

நூறு 100 கிராம் பழங்களில் உள்ள முக்கிய சத்துக்கள்:
பழம்        மாவுச்சத்து     புரதம்      நார்ச்சத்து         கலோரி
ஆப்பிள்     19 கிராம்       0.36கிராம்    3.3 கிராம்        72
சாத்துக்குடி  7.06            0.4          1.9              20
பப்பாளி     13.7            0.85         2.5              55
தர்பூசணி    89              71           80               80

மதிய உணவு: மூன்றில் ஒரு பங்கு சாதம் குறைத்து விட்டு ஒரு கொய்யா சேர்க்கவும்.

இரவு உணவு: ஒரு சப்பாத்தியைக் குறைத்து 100 கிராம் பப்பாளி உண்ணவும்.
இப்படி உண்டால் மாச்சத்து (சக்கரைச் சத்து) குறைந்து நார்ச்சத்து அதிகமாகும். அத்துடன் விட்டமின்கள்,தாது உப்புக்களும் கிடைக்கின்றன.
வ்யிறும் நிறைந்து உண்ட திருப்தி ஏற்படும்.

உங்களுக்கு சக்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா? ஒரே நேரத்தில் சாப்பிடாமல் 250 கிராம் பழங்களைப் பகிர்ந்து உண்ணவும்

No comments:

Post a Comment