நமது
அன்றாட உணவில் அளவுக்கு அதிகமான உப்பைச் சேர்த்துக்கொள்வதால் உயர் ரத்த
அழுத்தம், வலிப்பு நோய் போன்றவை ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள்
எச்சரிக்கின்றனர்.
ஹென்
ப்ளேகல், பீட்டர் மேக்னர் மற்றும் அவர்களது குழுவினர் நடத்திய ஆய்வொன்றில்
அதிக உப்புடன் சேர்ந்த உணவை தவிர்ப்பது நல்லது என்றும் உடலுக்கு தேவைக்கு
அதிகமான உப்பு சத்து உப்பு அவசியமற்றது என்றும் தெரியவந்துள்ளது.
எனவே
விடுதிகளிலும் உணவகங்களிலும் சாப்பிடுவதற்கு முன்பாக உணவு பதார்த்தங்களின்
வகைகளைக் கண்டறிந்து, உப்பு குறைவாக உள்ள உணவு பதார்த்தங்களை வாங்கிக்
கேட்டு உண்ணலாம் என தெரிவிக்கப்பட்டது.
உயர் ரத்த
பாதிப்பினால் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அவர்களில் 30
விழுக்காட்டினர் அதிக உப்பு சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணும் பழக்கம்
உள்ளவர்கள் என இந்த ஆய்வு கூறுகிறது.
இதற்கு
உதாரணமாக தென் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் குறைவான உப்பு கொண்ட
உணவுகளையே சாப்பிடுவதால் அவர்களுக்கு உயர் ரத்த பாதிப்பு ஏற்படுவதில்லை என
தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில்
ஜப்பானைச் சேர்ந்தவர்கள், ஒரு நபருக்கு 15 கிராம் உப்பு வரை உட்கொள்வதால்
அவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் சாத்தியம் சற்று அதிகம். இதனாலேயே
அங்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் வலிப்பு நோய் உள்ளவர்களின்
எண்ணிக்கையும் அதிகமாகவும் காணப்படுகிறது.
எவ்வளவு
அளவிலான உப்புதான் சேர்த்துக்கொள்ளலாம் என நீங்கள் கேட்பது தெரிகிறது.
சுறுசுறுப்பான இளம் வயதினர் நாளொன்றுக்கு 2.8 கிராம் உப்பும், வயதானவர்கள்
நாளொன்றுக்கு 2.2 கிராம் உப்பும் சேர்த்துக்கொள்ளலாம் என
அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment